விருதுகள் மற்றும் அங்கீகாரம்
சேவைக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தல்
"உண்மையான சேவைக்கு அங்கீகாரம் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் மேலும் சேவை செய்யத் தூண்டுகிறது."
சேவையே அதற்கான வெகுமதி
நாங்கள் விருதுகளுக்காக வேலை செய்வதில்லை, ஆனால் எங்களை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் அங்கீகாரத்தை மதிக்கிறோம்.
"மக்கள் சேவையே மகேசன் சேவை."
Major Recognitions

மதிப்புறு சமூக சேவகர்
அப்துல் கலாம் பவுண்டேஷன்
அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் சார்பில் கோவை ஜோன் ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான விருது வழங்கும் நிகழ்வில் குன்னத்தூர் தங்கராஜ் அவர்களுக்கு 'மதிப்புறு சமூக சேவகர்' விருதினை நீதிபதி முகமது ஜியாவுதீன் வழங்கி பாராட்டினார்.

சிவசக்தி சமூக சேவை விருது
R.V கலை அறிவியல் கல்லூரி
மேட்டுப்பாளையத்தில் Dr.R.V arts and science கல்லூரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் அவர்களிடம் சிவசக்தி சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த மக்கள் சேவை அரசன்
தமிழன் டிவி
கோவை SNMV கல்லூரியில் நடைபெற்ற தமிழன் டிவியின் சுதந்திர தின பட்டிமன்ற விழாவில் திருமதி கீதா தங்கராஜ் அவர்களுக்கு 'சிறந்த மக்கள் சேவை அரசன்' விருது நடிகர் பாண்டியராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.

சேவை சக்கரவர்த்தி தம்பதியர்
வேந்தர் டிவி
சுகுணா பொறியியல் கல்லூரியில் வேந்தர் டிவி நடத்தும் பொங்கல் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் Dr. கீதா தங்கராஜ் அவர்களுக்கு 'சேவை சக்கரவர்த்தி தம்பதியர்' விருது வழங்கப்பட்டது.

திருவாசக காப்பாளர்
பேரூர் ஆதீனம்
பேருர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சைவப் பெருவிழாவில் அடிகளார் அவர்களிடம் 'திருவாசக காப்பாளர்' விருது பெறப்பட்டது.

சினிஸ்டார் 2022
சினிஸ்டார் விருதுகள்
கோவை ஆர்.எஸ் புரம் கலை அரங்கத்தில் நடைபெற்ற சினிஸ்டார் 2022 விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டது.

DEFENDER AWARD
அருவி & முத்து பவுண்டேஷன்
கொரோனா காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை காத்தமைக்காக Aruvi Foundation மற்றும் Muthu Foundation சார்பில் 'DEFENDER AWARD' விருது வழங்கப்பட்டது.

சமூக சேவை விருது
எல்லாம் நம் சொந்தங்கள்
திருப்பூரில் எல்லாம் நம் சொந்தங்கள் அறக்கட்டளை மூலம் தன்னார்வலர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் சிவசக்தி சமூக சேவைக்கு விருது வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
குன்னத்தூர் குளம்
குன்னத்தூர் குளத்தில் 3000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி.

மக்கள் நலன்
நீர் மோர் வழங்கல்
குன்னத்தூரில் சிவசக்தி சமூக சேவை மூலமாக பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.

மதிப்புறு சமூக சேவகர்
பிற அங்கீகாரங்கள்
சேவைக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தல்
"உண்மையான சேவைக்கு அங்கீகாரம் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் மேலும் சேவை செய்யத் தூண்டுகிறது."
டாக்டர் தங்கராஜ்
சமூக சேவகர்
20 ஆண்டுகள் சேவை பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்
2005 முதல் 2025 வரை – ஒரு மனிதநேய கதை
