சிவசக்தி சமூக சேவையின் நிறுவனர்கள்
சேவைச் செம்மல்கள்

முனைவர் தங்கராஜ்
முனைவர் தங்கராஜ்
2005 ஆம் ஆண்டு முனைவர் தங்கராஜ் அவர்களால் தொடங்கப்பட்ட சிவசக்தி சமூக சேவை, எதிர்பார்ப்பற்ற சேவையை மக்களுக்கு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டது. இவரது பயணம் கருணை, விடாமுயற்சி மற்றும் சமூக நலனில் அசைக்க முடியாத நம்பிக்கையின் சான்றாகும்.
இவரது தலைமையின் கீழ், ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்த அமைப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சமூக ஆதரவு மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு இயக்கமாக வளர்ந்துள்ளது.
"மக்கள் சேவையே மகேசன் சேவை."

திருமதி கீதா தங்கராஜ்
திருமதி கீதா தங்கராஜ்
குப்பனூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த திருமதி கீதா தங்கராஜ், சிவசக்தி சமூக சேவையின் நிர்வாகத் தூணாகத் திகழ்கிறார். அமைப்பின் அன்றாட பணிகளை திறம்பட நிர்வகித்து, சேவையின் பயன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறார்.
இவர் வெறுமனே உறுதுணையாக மட்டும் இல்லாமல், முனைவர் தங்கராஜின் ஒவ்வொரு முயற்சியிலும் சமபங்கு வகிக்கும் ஒரு தலைவராவார். இவரது நிர்வாகத் திறனும், சமூக அக்கறயும் இந்த இயக்கத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை.
"அன்பும், செயலும் இணைந்ததே சேவை."
தொடக்க காலம்
"சேவை என்பது வெளிச்சத்தைத் தேடுவது அல்ல, இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாக மாறுவது என்று முனைவர் தங்கராஜ் நம்புகிறார்."
எங்கள் தத்துவங்கள்
சேவை என்பது விளம்பரத்தைத் தேடுவது அல்ல
எதிர்பார்ப்பற்ற உதவியே உண்மையான உதவி
சிறிய செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும்
சேவை என்பது ஒரு வாழ்க்கை முறை
கடந்த 20 ஆண்டுகளில், பல விருதுகளும் பாராட்டுகளும் வந்தன. ஆனால் அவர்கள் மாறவில்லை. சேவையின் அர்த்தம் மாறவில்லை.
"விருதுகள் சேவையை உருவாக்கவில்லை. சேவையே விருதுகளை உருவாக்கியது."
சேவைச் செம்மல்கள்
கணினி பயன்பாட்டியல் இளங்கலை (BCA)
20 ஆண்டுகள் சேவை பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்
2005 முதல் 2025 வரை – ஒரு மனிதநேய கதை
